டெல்லியில் அமைச்சர் எம்.சி.சம்பத் மத்திய மந்திரிகளுடன் சந்திப்பு


டெல்லியில் அமைச்சர் எம்.சி.சம்பத் மத்திய மந்திரிகளுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 27 Jun 2017 11:00 PM GMT (Updated: 2017-06-28T02:32:38+05:30)

டெல்லியில், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

டெல்லியில், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அரசுமுறை சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார்.

முதற்கட்டமாக அவர், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஹர்‌ஷவர்தனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது சுற்றுச்சூழல் விதிமீறல் இனங்களை வரன்முறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மந்திரியிடம் எம்.சி.சம்பத் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது தமிழ் நாட்டில் தொழில் துறை முதலீடுகள் மற்றும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிப்பணிகள் குறித்து நிர்மலா சீதாராமனிடம், எம்.சி.சம்பத் ஆலோசனை நடத்தினர்.

அதன்பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் மத்திய மின்சாரத்துறை மந்திரி பியூஷ்கோயலை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கனிமத்துறை தொடர்பான வி‌ஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

3 மத்திய மந்திரிகளுடனான சந்திப்பின் போது அமைச்சர் எம்.சி.சம்பத்துடன் தமிழக தொழில் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, கனிமவளத்துறை ஆணையர் பழனிச்சாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.


Next Story