மும்பையில் கடல் அலையில் சிக்கி 17 வயது பெண் பலி


மும்பையில் கடல் அலையில் சிக்கி 17 வயது பெண் பலி
x
தினத்தந்தி 28 Jun 2017 8:06 AM GMT (Updated: 2017-06-28T13:36:11+05:30)

நேற்று மும்பையின் மெரைன் ட்ரைவ் பகுதியில் 17 வயதான பீரித்தி ஸ்ரீகிருஷ்ணா பைஸ் என்பவர் கடல் அலையால் அடித்து செல்லப்பட்டார்.

மும்பை,

மும்பையில் கனமழை பெய்து வருகிறது. கடலிலும் அடிக்கடி சீற்றம் ஏற்பட்டு வருகிறது.இதனால் பெரிய அலைகள் உருவாகின்றன.

நேற்று மும்பையின் மெரைன் ட்ரைவ் பகுதியில் ஒரு பெண் கடல் அலையால் அடித்து செல்லப்பட்டார். 17 வயதான பீரித்தி ஸ்ரீகிருஷ்ணா பைஸ் என்பவர் கடற்கரையில் நின்று கொண்டிருக்கும் போது பெரிய அலை வந்ததாக கூறப்படுகிறது. அவர் அதனை தொட முயற்சி செய்த போது அலை அவரை கடலில் தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதில் அப்பெண் இறந்துவிட்டார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சிலர் அவர் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்ததாக கூறுகின்றனர். ஆனால் போலீஸ் அதனை மறுத்துள்ளனர். மும்பை போலீஸ் இது போன்ற நேரங்களில் கடலுக்கு அருகில் செல்லக்கூடாது என்று மக்களை எச்சரிக்கை செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை பார்த்த மும்பை வாசிகள் கடல் அலை சுமார் 4.81 மீட்டர் உயரத்தில் வந்தது என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றிக்கிழமை அதிக பட்சமாக கடல் அலையின் உயரம் 5.02 மீட்டர் ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.

Next Story