மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது, பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்


மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது, பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
x
தினத்தந்தி 25 July 2017 6:24 AM GMT (Updated: 2017-07-25T11:56:28+05:30)

மராட்டியத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.மும்பை, 


மராட்டிய மாநிலத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் மழை காலங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்பு நேரிடுவது வழக்கமான நிலையில் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டு ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. மழைக்கு முன்னதாகவே மோசமான கட்டிடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கயை மாநில அரசு எடுத்தது. 

இந்நிலையில் மும்பை காட்கோபூரில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து உள்ளது, கட்டிட இடிபாடுகளில் 8-க்கும் அதிகமானோர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story