ரூ. 2000 அச்சிடுவதை ரிசர்வங்கி நிறுத்தவில்லை ; விவகாரம் ராஜ்யசபாவில் எழுப்பப்பட்டது


ரூ. 2000  அச்சிடுவதை  ரிசர்வங்கி நிறுத்தவில்லை ; விவகாரம் ராஜ்யசபாவில் எழுப்பப்பட்டது
x
தினத்தந்தி 26 July 2017 10:12 AM GMT (Updated: 26 July 2017 10:12 AM GMT)

ரூ. 2000 அச்சிடுவதை ரிசர்வங்கி நிறுத்தவில்லை என தகவல் வெளியாகி உள்ளது இந்த விவகாரம் ராஜ்யசபாவில் எழுப்பப்பட்டது.

புதுடெல்லி

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.  ரூ.200 நோட்டுக்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த விவகாரம் குறித்து ராஜ்ய சபாவில் காங்கிரஸ் சமாஜ் வாதி கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை அச்சிடுவதை ரிசர்வங்கி நிறுத்தி விட்டதா என்ற கேள்விக்கு மத்திய அரசின் பதில் தேவை. என கேட்டனர்.

இதற்கிடையில்  செய்தி ஏஜென்சிகள் தகவல் படி ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவதை  ரிசர்வங்கி நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.

Next Story