கூட்டணி தர்மத்துக்காக இதுவரை அமைதி காத்து வந்தேன் ராஜினாமா செய்த பின் நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி


கூட்டணி தர்மத்துக்காக இதுவரை அமைதி காத்து வந்தேன்  ராஜினாமா செய்த பின் நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 26 July 2017 1:49 PM GMT (Updated: 2017-07-26T19:19:24+05:30)

கூட்டணி தர்மத்துக்காக இதுவரை அமைதி காத்து வந்தேன் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த பின் நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி அளித்தார்.

பாட்னா,

துணை முதல்வர் தொடர்பான விவகாரத்தில் கருத்து வேறுபாடால் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நிதிஷ்குமார்  வழங்கினார்

அதனை தொடர்ந்து  நிதிஷ்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

கூட்டணி கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவி விலகினேன். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போதும், ஜனாதிபதி தேர்தலின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராகுல் காந்தியிடம் ராஜினாமா முடிவை தெரிவித்தேன். 

மெகா கூட்டணியை உடைக்க விரும்பவில்லை. அதனால் தான் தான் பதவி விலகி உள்ளேன். இதுவரை பீகார் அரசு மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி வந்தது. ராஜினாமா செய்யுமாறு நான் யாரையும் வற்புறுத்தவில்லை. எங்களுடைய கட்சியில் எந்தவித பிரச்சனையும் இல்லை. கூட்டணி தர்மத்துக்காக இதுவரை அமைதி காத்து வந்தேன்.

பீகாரில் தொடர்ந்து நலதிட்டங்களை செயல்படுத்துவே ராஜினாமா முடிவை எடுத்தேன். பீகாரில் 243 தொகுதிகளில் 71 எம்.எல்.ஏக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. பீகாரில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் என்னால் பணியாற்ற முடியாது, பிரச்சினையை தீர்க்க முயற்சித்து தோல்வியுற்றேன்.

இவ்வாறு நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

Next Story