தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை + "||" + Three militants killed in Shopian encounter

காஷ்மீர் என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீர் என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


ஸ்ரீநகர், 

சோபியான் மாவட்டம் அவ்நீராவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் நேற்று இரவு தொடங்கினர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்படையினரும் திருப்பி சுட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். பயங்கரவாதிகள் சுட்டத்தில் ராணுவ தரப்பில் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ராணுவ ஆஸ்பத்திரியில் தீவிர 

இதையடுத்து அந்தப் பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. 

பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள். சுதந்திரதின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் இவர்கள் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. துப்பாக்கி சண்டையில் பலியான 2 வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றும் பெயர் இளையராஜா என்றும் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். 

இதற்கிடையே ஸ்ரீநகர் தால்கேட் பகுதியில் பத்யாரி சவுக் என்ற இடத்தில் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அந்தப் பகுதியில் வசிக்கும் இம்தியாஸ் அகமதுமிர் என்பவர் பலத்த தீக்காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.