அரியானா பஞ்ச்குலா வன்முறை சம்பவத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்


அரியானா பஞ்ச்குலா வன்முறை சம்பவத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
x
தினத்தந்தி 25 Aug 2017 3:34 PM GMT (Updated: 2017-08-25T21:04:02+05:30)

அரியானா பஞ்ச்குலா வன்முறை சம்பவத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப்பில் வன்முறை  வெடித்துள்ளது.  அரியானா-பஞ்சாப் மாநில கலவரத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

பஞ்ச்குலா வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அமைதி காக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலை திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Next Story