அரியானா முதல்வர் கட்டார் மீது பா.ஜனதா தலைமை அப்செட்? ஜனாதிபதி ஆட்சிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்


அரியானா முதல்வர் கட்டார் மீது பா.ஜனதா தலைமை அப்செட்? ஜனாதிபதி ஆட்சிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Aug 2017 8:17 AM GMT (Updated: 2017-08-26T13:47:34+05:30)

பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியதும் வன்முறை வெடித்ததை அடுத்து காங்கிரஸ் ஜனாதிபதி ஆட்சியை கோரிஉள்ளது.


சண்டிகார், 

பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டதால் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டு உள்ளது. அரியானா, பஞ்சாப்பில் பதட்டம் நீடித்து வருகிறது. ஏற்கனவே வன்முறை வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமல் மற்றும் சாமியாரின் ஆதரவாளர்கள் கூடுவதை தவிர்ப்பதில் நடவடிக்கையில் மாநில அரசு தோல்வியை கண்டதாக கடும் விமர்சனம் எழுந்து உள்ளது.

வன்முறையில் 31 பேர் பலியாகி உள்ளனர், 200க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வன்முறை ஏற்பட்ட மாநிலங்களில் இப்போது நிலவும் நிலை என்ன என்பது தொடர்பாக ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையை தன்னுடைய வீட்டில் நடத்தினார். முக்கிய விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அரியானா முதல்-மந்திரி கட்டார் மீது பாரதீய ஜனதாவின் உயர்மட்ட தலைமையானது மிகவும் அப்செட் ஆகிஉள்ளது என்பதை நகர்வுகள் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மாலைக்குள் முதல்-மந்திரி நிலையை அறிவிக்க வேண்டும் என்ற நிலை காணப்படுவதாக தெரிகிறது என தகவல்கள் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

மத்திய அரசின் தோல்வி

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி பேசுகையில், வன்முறையால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் என வெளியாகி உள்ள செய்திகள் தவறானது, உயிரிழப்பு அதிகமாகும். அரியானா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மத்திய அரசிற்கும் இந்த தோல்வியில் பங்கு உள்ளது. உளவுத்துறை தகவல்கள் எங்கே? பிரதமர் மோடி அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாரை காப்பாற்ற முயற்சி செய்கிறார். நாங்கள் ஜனாதிபதி ஆட்சியை வலியுறுத்துகிறோம். பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பு எங்கே போனது? என கேள்வி எழுப்பி உள்ளார். 


Next Story