சிறந்த சாலைகள் நமது விவசாயிகளுக்கு மிகவும் உதவுகின்றன உதய்பூரில் பிரதமர் மோடி பேச்சு


சிறந்த சாலைகள் நமது விவசாயிகளுக்கு மிகவும் உதவுகின்றன உதய்பூரில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 29 Aug 2017 10:51 AM GMT (Updated: 2017-08-29T16:21:13+05:30)

சிறந்த சாலைகள் நமது விவசாயிகளுக்கு மிகவும் உதவுகின்றன என பிரதமர் மோடி கூறினார்.

போபால்,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

சில திட்டங்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.  சாலைகள் ராஜஸ்தான் மற்றும் தேசத்தை இணைக்கும் மட்டும் அல்ல  அவை முன்னேற்றத்திற்கான வாயில்கள். நல்ல சாலைகள் ராஜஸ்தான் மக்களுக்கு பயன்படும். 

மாநிலத்தில் வலுவான சாலைகள் சுற்றுலா பயணிகள் வருகை பெரும் அளவில் அதிகரிக்கும். சிறந்த சாலைகள் நமது விவசாயிகளுக்கு மிகவும் உதவுகின்றன. சாலைகள், ரெயில்வே ஆகியவை உட்கட்டமைப்புக்கு வசதியாக இருக்கும். 

நாங்கள் தொடங்கிய திட்டங்களை நிறைவு செய்வோம். புதிய உயரத்திற்கு இந்தியாவை எடுத்து செல்வோம். இந்தியா முழுவதும் வலுவான சாலைகள் நெட்வொர்க்கை அடல் ஜி பேசியதற்கான காரணம் இது தான் என பிரதமர் மோடி பேசினார்.

இந்த விழாவில்  மத்திய சாலை போக்குவரத்துறை மந்திரி நிதின் கட்கரி மற்றும் ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story