தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சாலை விபத்தில் பலி + "||" + Nine killed in car-truck collision in Karnataka's Yellapur

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சாலை விபத்தில் பலி

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சாலை விபத்தில் பலி
கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சாலை விபத்தில் பலியாகினர்.
பெங்களூர்,

கர்நாடக மாநிலம் பெலாகாவி மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மங்களூரு அருகே உள்ள குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு காரில் சென்று சாமி தரிசனம் முடித்து விட்டு வீடுதிரும்பி கொண்டிருந்தனர். கார் உத்தரகன்னட மாவட்டம் எல்லாபூர் அருகில் உள்ள அரபைலு கிராமம் அருகே வந்து கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. 

இந்த கோர விபத்தில் காரின் முன்புறம் அப்பளம் போல் காட்சி அளித்தது. காரில் பயணம் செய்த 3 குழந்தைகள், 3 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

லாரில் இருந்த 2 பேர் சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர். அவர்கள் எல்லாபுரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சாலை விபத்தில் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.