காஷ்மீரில் 6ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் சிலை கண்டெடுப்பு


காஷ்மீரில் 6ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 24 Sep 2017 11:11 AM GMT (Updated: 2017-09-24T16:40:53+05:30)

காஷ்மீரில் 6ம் நூற்றாண்டை சேர்ந்த அரிதான ஒரு முகம் கொண்ட சிவன் சிலை ஒன்று நீர்நிலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஹர்வான் என்ற பகுதி உள்ளது. இது பிரபல பாரம்பரியம் மிக்க பகுதியாக உள்ளதுடன் தொல்பொருள் ஆய்வுக்கான முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உள்ளது. இங்கு புத்த மதம் சார்ந்த மிக பழமையான இடங்களும் உள்ளன.

இந்நிலையில் இங்குள்ள நீர்நிலை ஒன்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் கையில் மிக பழமையான சிலை ஒன்று கிடைத்துள்ளது. மிக அரிதான, ஒரு முகம் கொண்ட சிவன் சிலையான இது 6ம் நூற்றாண்டை சேர்ந்தது. முட்டை வடிவிலான இந்த சிலை 2.5 அடி உயரம் உடையது.

இதனை தொடர்ந்து போலீசிடம் சிலையை அவர்கள் கொடுத்துள்ளனர். அவர்கள் இந்த சிலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

காஷ்மீரில் முதன்முறையாக இதுபோன்ற ஒரு சிலை கிடைத்துள்ளது என அத்துறையின் இயக்குநர் முகமது சஃபி கூறியுள்ளார்.


Next Story