பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வன்முறை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு


பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வன்முறை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 25 Sep 2017 11:45 PM GMT (Updated: 2017-09-26T03:30:31+05:30)

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவிக்கு மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

வாரணாசி

வன்முறையில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் 2 பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமான மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து லங்கா போலீசார் வன்முறையில் ஈடுபட்டதாக ஆயிரத்துக்கும் மேலான மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல தடியடியில் ஈடுபட்டதாக அடையாளம் தெரியாத போலீசார் மீதும் தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

காயம் அடைந்த மாணவர்களை நேற்று சமாஜ்வாடி கட்சித் தொண்டர்கள் சந்திக்க முயன்றனர். போலீசார் அனுமதிக்காததால் பல்கலைக்கழக வாசலில் தர்ணாவில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். சமூகநல ஆர்வலர் தீஸ்தா செடால்வத்தும் கைது செய்யப்பட்டார்.

Next Story