மெர்சல் விவகாரம்; சினிமா நடிகர்களுக்கு குறைந்த அளவு ஐ.க்யூ. என்ற பா.ஜனதா தலைவருக்கு இந்தி நடிகர் எதிர்ப்பு


மெர்சல் விவகாரம்; சினிமா நடிகர்களுக்கு குறைந்த அளவு ஐ.க்யூ. என்ற பா.ஜனதா தலைவருக்கு இந்தி நடிகர் எதிர்ப்பு
x
தினத்தந்தி 23 Oct 2017 4:54 AM GMT (Updated: 23 Oct 2017 4:54 AM GMT)

சினிமா நடிகர்களுக்கு குறைந்த அளவு ஐ.க்யூ. என விமர்சனம் செய்த பா.ஜனதா தலைவருக்கு இந்தி நடிகர் ஃபர்ஹான் அக்தர் பதிலடியை கொடுத்து உள்ளார்.


மும்பை,


விஜய் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வந்த மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை விமர்சிக்கும் வசனங்கள் உள்ளன. இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் கண்டித்தனர். 

ராகுல் காந்தி மெர்சல் படத்துக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து உள்ளார். இதனால் மெர்சல் தேசிய அளவில் பிரபலமாகி ஆதரவும்,  எதிர்ப்பும் குவிந்து வருகிறது. டெலிவிஷன்களிலும் இந்த படம் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. எதிர்ப்பு காரணமாக சர்ச்சை காட்சிகளை நீக்க தயார் என்று மெர்சல் பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. ஆனால் நடிகர்களும் நடிகைகளும் சர்ச்சை காட்சிகளை நீக்க கூடாது என்று மெர்சலுக்கு ஆதரவான கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்கள். இவ்விவகாரம் தொடர்பாக ஆங்கில மீடியாவிற்கு பேட்டியளித்து பேசிய பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் நரசிம்கா ராவ், இந்திய திரைப்பட நடிகர்களுக்கு மிகவும் குறைந்த அளவு ஐ.க்யூ (IQ- Intelligent Quotient நுண்ணறிவுத் திறன்) மற்றும் பொது அறிவு கொண்டவர்கள் என்றார். 

நரசிம்கா ராவின் இந்த விமர்சனத்தினால் கோபம் அடைந்த இந்தி நடிகரும், இயக்குநருமான ஃபர்ஹான் அக்தர், டுவிட்டரில் அவருடைய பேட்டியை இணைத்து, உங்களுக்கு என்ன தைரியம்? சார் என கேள்வியை எழுப்பி உள்ளார்.

Next Story