இந்திரா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பீகார் கவர்னர், நிதிஷ்குமார் அஞ்சலி


இந்திரா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பீகார் கவர்னர், நிதிஷ்குமார் அஞ்சலி
x
தினத்தந்தி 31 Oct 2017 9:28 AM GMT (Updated: 2017-10-31T14:58:47+05:30)

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி இரு தலைவர்களின் சிலைக்கு கவர்னர், நிதிஷ்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பாட்னா,

சர்தார் வல்லபாய் பட்டேலின் 142வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 33-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பீகாரில் மாநில கவர்னர்  சத்திய பால் மாலிக் மற்றும்முதல்-மந்திரி நிதீஷ் குமார் ஆகியோர் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைதொடர்ந்து இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த படத்திற்கு  (IGIMS) மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அக்டோபர் 31-ம் தேதி (சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்) நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story