மத்திய பிரதேசத்தில் விவசாயியின் வயிற்றுக்குள் இரும்பு டம்ளர் டாக்டர்கள் அதிர்ச்சி


மத்திய பிரதேசத்தில் விவசாயியின் வயிற்றுக்குள் இரும்பு டம்ளர் டாக்டர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 29 Nov 2017 10:06 AM GMT (Updated: 29 Nov 2017 10:05 AM GMT)

மத்திய பிரதேசத்தில் விவசாயியின் குடலில் இருந்த இரும்பு டம்ளரை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சாத்னாவில் விவசாயி ஒருவர் கடந்த சில மாதங்களாக வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கிராமத்தில் உள்ள டாக்டர்களை அணுகிய போது  வயிற்று வலிக்கு மருந்து மாத்திரைகளை கொடுத்து அனுப்பி வைத்தனர். ஆனால் அவருக்கு வயிற்று வலி நின்றபாடில்லை அதனை தொடர்ந்து அவருக்கு முதுகு பகுதியின் அடியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக அவரது குடும்பத்தார் விவசாயியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  பின்னர் அவரது வயிற்று பகுதியை டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்தனர் . அதில் எதோ மர்ம பொருள் இருப்பதை கண்டு பிடித்தனர். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு விவசாயிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

அறுவை சிகிச்சையின் போது மலக்குடலில் இரும்பு டம்ளர் இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரும்பு டம்ளர் உடனடியாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து நோயாளிடம் கேட்டபோது சிலர் எனக்கு போதை மருந்து கொடுத்து எனது வயிற்றுக்குள் இரும்பு டம்ளரை வைத்து விட்டார்கள் என சோகத்துடன் கூறினார்.

Next Story