88 மாணவிகளின் ஆடைகளை களைந்து தண்டனை வழங்கிய ஆசிரியைகள்


88 மாணவிகளின் ஆடைகளை களைந்து தண்டனை வழங்கிய ஆசிரியைகள்
x
தினத்தந்தி 30 Nov 2017 7:21 AM GMT (Updated: 30 Nov 2017 7:21 AM GMT)

அருணாசல பிரதேசத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் 88 மாணவிகளின் ஆடைகளை களைந்து ஆசிரியைகள் தண்டனை வழங்கி உள்ளனர்.

இட்டாநகர்

அருணாசலபிரதேசம் பபும் பேரே மாவட்டம் தனிகப்பாவில் உள்ளது கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிக்கூடம். இந்த பள்ளிக்கூடத்தில்  கடந்த 23 ந்தேதி  பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவி இருவரை தொடர்பு படுத்தி  ஆபாச கடிதம் எழுதியதாக புகார் எழுந்தது. பள்ளிக்கூடத்தை சேர்ந்த 6- மற்றும் 7ம் வகுப்பு மாணவவிகள் தான் இந்த மோசமான கடிதத்தை  எழுதியதாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து 3 ஆசிரியர்கள்   6 மற்றும் 7ம் வகுப்பை சேர்ந்த 88 மாணவிகளின்  ஆடைகளை அகற்றி தண்டனை வழங்கி உள்ளனர்.

2 உதவி ஆசிரியர்கள்  மற்றும் ஒரு இளைய ஆசிரியர் சேர்ந்து 88 மாணவிகளின் ஆடைகளை அகற்றி சோதனை நடத்தி உள்ளனர். இதில் ஒரு மாணவியிடம்  இருந்து அந்த ஆபாச கடிதத்தை  கைப்பற்றி உள்ளனர். 

இந்த விவகாரம் கடந்த 27 ந்தேதி  வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைத்து சாகேலி மாணவர் ஒன்றியத்தில் புகார் அளித்து உள்ளனர். இதை தொடர்ந்து உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு உத்தரவின் பேரில் இது குறித்து உள்ளூர்  மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். 

Next Story