உ.பி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முதல் இடத்தில் பா.ஜ.க, 2-வது பிஎஸ்பி, 3வது இடத்தில் காங்கிரஸ்


உ.பி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முதல் இடத்தில் பா.ஜ.க, 2-வது பிஎஸ்பி, 3வது இடத்தில் காங்கிரஸ்
x
தினத்தந்தி 1 Dec 2017 10:39 AM GMT (Updated: 1 Dec 2017 10:38 AM GMT)

உத்தரபிரதேசம் உள்ளாட்சி தேர்தல் வெற்றி வாய்ப்பில் முதல் இடத்தில் பா.ஜ.க , இரண்டாவது இடத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தில் காங்கிரசும் உள்ளன.

லக்னோ

உத்தரபிரதேசத்தில் கடந்த நவம்பர்  22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக  649 இடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று 1ம் தேதி நடைபெறுகிறது. இன்று மாலைக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச  உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா முன்னணியில் உள்ளது.   உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் என்பதால், அரசியல் தலைவர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

அயோத்தி, ஆக்ரா மற்றும் மதுரா ஆகிய மாநகரங்களின்  மேயர் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. ஆளும் கட்சிலக்னோ, அலாகாபாத், அலிகார், வாரணாசி, கஜியாபாத், கோரக்பூர், பைசாபாத் மற்றும் மொராதாபாத். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஜான்சியில் முன்னணியில் உள்ளது.

மேயர் தேர்தல் நடந்த 16 இடங்களில் பாரதீய ஜனதா 14 இடங்களில் முன்னணியில் உள்ளது.

ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் அமேதி நகர் பஞ்சாயத்தில் பாரதீய ஜனதா1035  ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது. பா.ஜ.க.வின் சந்திரமா தேவி அமேதி நகர் பஞ்சாயத்து தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மருமகள் தீபா கோவிந்த் ஜியோஜாங்கில் தோல்வி அடைந்தார். அங்கு  அவர் சுயேட்சையாக  போட்டியிட்டார்.

கான்பூரில்  பா.ஜ.க பிரமிளா பாண்டே வெற்றி பெற்றார். இவர் இந்நகரின்  இரண்டாவது பெண் மேயர் ஆவார். இவர் ரிவால்வர்த்தி  எனவும் அழைக்கப்படுகிறார்.

 மொத்தம் தேர்தல் நடந்த உள்ள 649 உள்ளாட்சி இடங்களில் அதிக இடங்களில் பாரதீய ஜனதாவே வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது. இரண்டாவது இடத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தில் காங்கிரசும் உள்ளன.

Next Story