ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் சில முறைகேடுகள் நடந்து உள்ளது ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு


ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் சில முறைகேடுகள் நடந்து உள்ளது ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Feb 2018 1:55 PM GMT (Updated: 8 Feb 2018 1:55 PM GMT)

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் சில முறைகேடுகள் நடந்து உள்ளது என ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டிஉள்ளார்.



 புதுடெல்லி,


இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு நடைபெற்ற பேரத்தில் ஊழல் நடந்து உள்ளது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. பிரதமர் மோடி ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசியும் விமான ஒப்பந்தம் தொடர்பாக பேசவில்லை என ராகுல் கேள்வியை எழுப்பினார். நேற்று பாராளுமன்றத்தில் இவ்விவகாரம் எழுப்பட்டதை அடுத்து ரபேல் போர் விமான ஒப்பந்தம், காங்கிரஸ் அரசால் பேசப்பட்டதை விட சிறந்தது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. 

ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2016–ம் ஆண்டு, 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவற்கு போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

அரசாங்கம் செய்து கொண்ட இந்த ஒப்பந்தம், திறன், விலை, உபகரணம், ஒப்படைப்பு செய்வது, பராமரிப்பு, பயிற்சி உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் சிறப்பானது என்பதை வலிவாக வலியுறுத்திக் கூறுகிறோம். இது, முந்தைய (காங்கிரஸ்) அரசால் பேச்சு நடத்தி, 10 ஆண்டுகளாக செய்து முடித்திராத ஒன்று. தற்போதைய அரசு ஒரே ஆண்டில் பேச்சு வார்த்தை நடத்தி முடித்து உள்ளது. ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் பற்றிய விவரங்கள், மதிப்பு பற்றி கோரப்படுவதை தெரிவிப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு

இந்நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் சில முறைகேடுகள் நடந்து உள்ளது என ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டிஉள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் விமான ஒப்பந்த விவகாரத்தில் விலை தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படும் என கூறியிருந்தார். ஆனால் இப்போது ரகசியம் என கூறி விபரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார். அவருடைய இரு அறிக்கையில் எது சரியானது? என கேள்வியை எழுப்பி உள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கமிட்டியிடம் கேட்டார்களா? ஒப்பந்தம் எச்ஏஎல்லிடம் இருந்து பறிக்கப்பட்டது ஏன்? தொழில் அதிபரிடம் கொடுக்கப்பட்டது ஏன்? என மூன்று கேள்விகள் பிரதமர் மோடிக்கு முன்வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரையில் பதில் கிடையாது. 

நேற்று அவர் பேசியதை நீங்கள் பாத்திருப்பீர்கள், நீண்ட நேரம் பேசினாரே தவிர அடிப்படை கேள்விகள் தொடர்பாக பதில் அளிக்க விரும்பவில்லை என ராகுல் காந்தி பேசிஉள்ளார். 

Next Story