டெல்லி மாணவர் “இளைய இந்தியா மாணவர்” விருதை வென்றார்


டெல்லி மாணவர் “இளைய இந்தியா மாணவர்” விருதை வென்றார்
x
தினத்தந்தி 8 Feb 2018 2:15 PM GMT (Updated: 8 Feb 2018 2:15 PM GMT)

டெல்லியை சேர்ந்த மாணவர் கட்டுரை போட்டி ஒன்றில் இங்கிலாந்து நாட்டின் பாத் பல்கலை கழகத்தின் “இளைய இந்தியா மாணவர்”விருதை வென்றுள்ளார்.

புதுடெல்லி,

கட்டுரை போட்டிக்காக பிரிட்டன் பாத் பல்கலைகழகத்தால் வழங்கப்படும் “இந்த வருடதிற்கான இளைய இந்தியா  மாணவர் விருதை டெல்லியை சேர்ந்த வசந்த் வேலி பள்ளி மாணவர் வென்றார்.

இந்தியா முழுவதும் மாணவர்களிடையே நடைபெற்ற இப்போட்டியில் நமித் மேகிஜா இந்த விருதை வென்றார்.

வெளிப்படையான வர்த்தகத்திலிருந்து இந்தியாவிற்கு அதிக பலன்கள் கிடைக்குமா? - உதாரணமாக இங்கிலாந்து உடனான வர்த்தகம் என்ற தலைப்பில் 2 ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுமாறு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.

ஆராய்ச்சி, பல்வேறு வரைபடங்கள் மற்றும் ஜி.டி.பி. தகவல் உள்ளிட்டவை அடங்கிய இந்த கட்டுரைக்காக மேகிஜாவுக்கு ரூ.2.67 லட்சம் வழங்கப்பட்டது.  இந்த போட்டியில், டேராடூனின் வெல்ஹேம் பாய்ஸ் பள்ளியை சேர்ந்த அபூர்வ் கோயல் மற்றும் டெல்லி பப்ளிக் பள்ளியை சேர்ந்த வைபவ் குப்தா 2வது இடத்தினை பகிர்ந்து கொண்டனர்.


Next Story