தேசிய செய்திகள்

‘ஒரேயொரு தவறான டுவிட்’ பிரதமர் மோடிக்கு ஆங்கில இலக்கணம் வகுப்பெடுக்கும் டுவிட்டர்வாசிகள்! + "||" + Twitter Schools PMO on Grammar After Error

‘ஒரேயொரு தவறான டுவிட்’ பிரதமர் மோடிக்கு ஆங்கில இலக்கணம் வகுப்பெடுக்கும் டுவிட்டர்வாசிகள்!

‘ஒரேயொரு தவறான டுவிட்’ பிரதமர் மோடிக்கு ஆங்கில இலக்கணம் வகுப்பெடுக்கும் டுவிட்டர்வாசிகள்!
ஒரேயொரு தவறான ட்வீட் காரணமாக பிரதமர் மோடிக்கு ஆங்கில இலக்கணம் தொடர்பாக டுவிட்டர்வாசிகள் வகுப்பெடுத்து உள்ளனர்.

புதுடெல்லி,


பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக தாக்கி பேசியதை பொதுமக்கள் தொலைக்காட்சிகளில் பார்த்து இருக்கலாம். அவருடைய பேச்சை குறிப்பிட்டு பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ டுவிட்டரில் (அலுவலக அதிகாரிகளால் கையாளப்படுவது, பிரதமர் மோடியால் கிடையாது) வெளியிட்ட செய்தி ஒன்றில் தவறு நேரிட்டது. இதனையடுத்து டுவிட்டர்வாசிகள் அவருக்கு ஆங்கில இலக்கணம் தொடர்பாக பாடம் எடுத்து வருகிறார்கள்.  

 “மோசமான தரம் மற்றும் எல்லோராலும் தாங்கி கொள்ளும் வகையிலான சுகாதார வசதியை ஏற்படுத்த இணைந்து பணியாற்றுவோம்,”, என குறிப்பிடப்பட்டிருந்தது. 

‘poor’ என்ற வார்த்தை தவறுதலாக இடம்பெற்றிருந்ததை அடுத்து டுவிட்டரில் பதில் டுவிட்கள் செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து அவருக்கு பாடம் எடுக்க தொடங்கிவிட்டார்கள். எழுத்துப்பிழையின் காரணமாக அர்த்தம் மாறிவிட்டது, இனி இதுபோல் நடக்க கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து உள்ளனர். சிலர் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறிவருகிறார்கள். மோசமான தரத்திலா மோடி ஜி? பிரதமர் இப்படி சொல்வது சரி கிடையாது எனவும் கருத்து பதிவிட்டு உள்ளனர்.