விபத்துகளை தவிர்பதற்காக ’மெதுவாக செல் - பாதுகாப்பாக செல்’ பலகைகள் அமைக்க மம்தா உத்தரவு

விபத்துகளை தவிர்பதற்காக ’மெதுவாக செல் - பாதுகாப்பாக செல்’ பலகைகள் அமைக்க மம்தா உத்தரவு
x
தினத்தந்தி 19 Feb 2018 6:54 PM GMT (Updated: 19 Feb 2018 6:54 PM GMT)

நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பதற்காக ’மெதுவாக செல்வது - பாதுகாப்பாக செல்வது’ போன்ற பலகைகள் அமைக்க மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

பாஹரம்பூர் ,

நெடுஞ்சாலைகளில் ஏற்படும்  விபத்துகளை தவிர்ப்பதற்காக ’மெதுவாக செல்வது - பாதுகாப்பாக செல்வது’ போன்ற பலகைகள் அமைக்க  மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பஹரம்பூரில் நடைபெற்ற ஒரு நிர்வாக கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது, 

‘மோட்டார் வாகனங்களால் நடக்கும் போக்குவரத்து விதிமுறை மீறல் குறித்து கவலையை வெளிப்படுத்தினார்.  நெடுஞ்சாலைகளில்  விபத்துகள் ஏற்படக்கூடிய இடங்களில் ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பலகைகள் வைக்கப்படும்.

 முர்ஷிதாபாத்தில் கடந்த ஜனவரி 29-ம் தேதி நடந்த விபத்தில் 42 பேர் இறந்தனர்.   குறிப்பிட்ட சில இடங்களில் விபத்து தடுப்புகளை அமைப்பதற்காக பொது பணித்துறையை கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story