திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரிசுபொருளை பிரித்தபோது வெடித்து மணமகன்-பாட்டி பலி


திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரிசுபொருளை பிரித்தபோது வெடித்து மணமகன்-பாட்டி பலி
x
தினத்தந்தி 24 Feb 2018 9:28 AM GMT (Updated: 24 Feb 2018 9:28 AM GMT)

ஓடிசாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கொடுத்த பரிசை பிரித்து பார்த்ததில், வெடிகுண்டு வெடித்து புது மாப்பிள்ளையும், பாட்டியும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்னாகர்

ஓடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டம் பட்நாகர் நகரைச் சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹூ. கடந்த 18ம் தேதி, இவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இதனையடுத்து கடந்த புதனன்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமக்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் பலரும் வாழ்த்து சொல்லி பரிசு பொருள்களை வழங்கினர்.

இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை புதுமண தம்பதியினர் நேற்று ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பரிசை பிரிக்கும் போது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை சேகரும் அவருடைய பாட்டியும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மணமகளும் உறவினர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திருமண பரிசில் வெடிகுண்டை வைத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story