தேசிய செய்திகள்

முதல் மந்திரி மனோகர் பரிக்கரின் உடல் நிலை சீராக உள்ளது: கோவா மந்திரி தகவல் + "||" + Manohar Parrikar "Fine And Stable", Says Goa Minister

முதல் மந்திரி மனோகர் பரிக்கரின் உடல் நிலை சீராக உள்ளது: கோவா மந்திரி தகவல்

முதல் மந்திரி மனோகர் பரிக்கரின் உடல் நிலை சீராக உள்ளது: கோவா மந்திரி தகவல்
முதல் மந்திரி மனோகர் பரிக்கரின் உடல் நிலை சீராக உள்ளது என்று கோவா சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். #ManoharParrikar
பானஜி,

கோவா மாநில முதல் மந்திரி மனோகர் பரிக்கர் வயிற்று வலி காரணமாக மீண்டும் கோவா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 62 வயதான பரிக்கர் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி கணையத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  கடந்த வியாழனன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இதற்கிடையில் கோவா சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்டு திட்டங்களை முன்மொழிந்த பரிக்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தற்போது “நீரிழிவு நோயால் அவதிப்பட்ட முதல்வர் மீண்டும்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  முதல் மந்திரி மனோகர் பரிக்கரின் உடல் நிலை சீராக உள்ளது என்று கோவா சுகாதாரத்துறை மந்திரி விஸ்வஜித் ரானே  தெரிவித்துள்ளார்.