தேசிய செய்திகள்

கவர்னருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு? எங்களுக்கு எந்தஒரு தகவலும் தெரியாது - உள்துறை அமைச்சகம் + "||" + Governor accused of sexual exploitation? MHA says not aware of such development

கவர்னருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு? எங்களுக்கு எந்தஒரு தகவலும் தெரியாது - உள்துறை அமைச்சகம்

கவர்னருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு? எங்களுக்கு எந்தஒரு தகவலும் தெரியாது - உள்துறை அமைச்சகம்
தென் இந்தியாவை சேர்ந்த கவர்னருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு செய்தி தொடர்பாக எந்தஒரு தகவலும் தெரியாது என உள்துறை தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,


தென் மாநில கவர்னர்களில் ஒருவர் மீது பாலியல் புகார் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்று உள்ளது என செய்தி வெளியாகியது. புகாரின் உண்மைத்தன்மையை அறிய விசாரணையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. கவர்னர் மாளிகையில் பணிபுரியும் பெண்களை பாலியல் உறவுக்கு இணங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது என புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியது. இதுதொடர்பாக விசாரணை முகமைகள் விசாரிப்பதாகவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் எங்களுக்கு எந்தஒரு தகவலும் தெரியாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

தென் இந்தியாவை சேர்ந்த கவர்னர் ஒருவருக்கு எதிராக பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பதில் அளிக்கையில், “இதுபோன்ற நகர்வு தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது,” என பதில் அளித்து உள்ளார் என பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது.