இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது -வங்காளதேச அதிபர்


இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது -வங்காளதேச அதிபர்
x
தினத்தந்தி 9 March 2018 6:41 AM GMT (Updated: 9 March 2018 6:41 AM GMT)

இந்தியாவுடனான உறவு தங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என வங்காளதேச அதிபர் அப்துல் ஹமீத் கூறியுள்ளார். #BangladheshPresident

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் நடைப்பெற்ற இரவு விருந்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வங்கதேச அதிபர் அப்துல் ஹமீத், ”வங்காளதேசத்திற்கு இந்திய நாட்டுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவின் அண்டை நாடுகளில் வங்கதேசம் மிகவும் நம்பத்தகுந்த நாடு. மேலும் இரு நாடுகளும் பொதுவான சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கின்றன. இந்த உறவை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும். வங்காளதேச விடுதலை போரில் இந்திய அரசும், இந்திய நாட்டு மக்களும் அளித்த ஒத்துழைப்பு அளப்பரியது. குறிப்பாக கிளர்ச்சி நேரத்தில் அசாம் மற்றும் மேகலாயாவின் ஒத்துழைப்பு நினைவு கூறத்தக்கது. இரு நாடுகளின் முன்னேற்றத்திற்கு இடையேயான உறவு எப்போதும் இருக்கும்” எனக் கூறினார்.

வடகிழக்கு பிராந்தியம் மற்றும் அசாம் மாநிலத்திற்கு இடையேயான வரலாற்று தொடர்பில் கலந்துகொண்ட வங்காளதேச அதிபரின் வருகைக் குறித்து அசாம் முதல்வர் சர்பானந்த் சோனோவால் கூறுகையில், ”வங்கதேசத்திற்கும் அசாம் மாநிலத்திற்கும் இடையேயான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் வங்கதேசத்துடனான அசாம் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் தனித்துவமானது. இந்த சிறப்புமிக்க உறவு இரு அரசுக்கிடையேயான பொதுவான கலாச்சாரம், பாரம்பரியம், இலக்கியம் மற்றும் மொழி தொடர்பான வேரூன்றிய உறவாக திகழ்கிறது” எனக் கூறினார்.

Next Story