தேசிய செய்திகள்

பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் + "||" + Pak fires unprovoked on LoC, violates truce in Poonch

பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். #PoonchCeasefireViolation
ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லை மீறி நடந்த இத்தாக்குதல் குறித்து பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ”இன்று காலை 9.30 மணியளவில் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவப்படையினர் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும் வகையில் வலுவாகவும், திறம்படவும் செயல்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் எந்த வித சேதங்களும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் ராணுவத்தினர் ராஜோவ்ரியிலுள்ள சுண்டெர்பானி பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.