என்னுடைய மனைவி முதல் திருமணத்தை என்னிடம் மறைத்துவிட்டார் முகமது ஷமி அதிர்ச்சி!


என்னுடைய மனைவி முதல் திருமணத்தை என்னிடம் மறைத்துவிட்டார் முகமது ஷமி அதிர்ச்சி!
x
தினத்தந்தி 15 March 2018 11:00 AM GMT (Updated: 15 March 2018 11:00 AM GMT)

என்னுடைய மனைவி முதல் திருமணத்தை என்னிடம் மறைத்துவிட்டார் என முகமது ஷமி கூறிஉள்ளார். #MohammedShami

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹன் கடந்த வாரம் பரபரப்பு புகார் தெரிவித்தார். அதில், ‘முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது. அவரும், அவருடைய குடும்பத்தினரும் என்னை கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருகிறார்கள். என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள்’ என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கொல்கத்தா போலீசில் புகார் செய்தார்.

 இது குறித்து ஜாதவ்பூர் போலீசார் முகமது ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது கொலைமுயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரச்சனைக்கு இடையே முகமது ‌ஷமி, மனைவிக்கு சமாதான தூது அனுப்பினார். அவர் கூறுகையில், ‘எனது மனைவியுடன் நான் சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். மனைவி, மகளுடன் என்னால் சேர்ந்து வாழ முடியும். நான் ஒரு அப்பாவி, எனக்கு எதிராக சதி நடக்கிறது. எனது மனைவியை யாரோ ஒருவர் தவறாக வழிநடத்துகிறார். இந்த சர்ச்சையால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால் அது பயிற்சியையும் பாதித்துள்ளது’ என்றார்.

ஆனால் முகமது ‌ஷமியின் சமரசத்தை ஏற்க மறுத்த ஹசின் ஜஹன், ‘கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு ஏற்ற மாதிரி என்னை மாற்றிக்கொண்டேன். ஆனால் அவரோ தொடர்ந்து தவறுகள் செய்தாரே தவிர திருந்தவில்லை. இந்த பிரச்சினையில் இப்போது போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். எனது வழக்கறிஞரின் ஆலோசனைப்படி நான் செயல்படுகிறேன். மற்ற பெண்களுடன் ‌ஷமிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் உள்ள செல்போன் என்னிடம் இருக்கிறது. அந்த செல்போன் மட்டும் என்னிடம் இல்லாவிட்டால் இந்த நேரம் அவர் என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கியிருப்பார்’ என்றார். 

இப்பிரச்சனையில் முகமது ‌ஷமி மனைவி ஹசின் ஜஹனின் முன்னாள் கணவர் சைஃபுதீன்  மவுனம் கலைத்து பேசுகையில், முகமது ‌ஷமி மற்றும் ஹசின் ஜஹன் இணைந்து வாழ வேண்டும் என்றார். ஹசின் ஜஹன் மற்றும் சைஃபுதீனுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

முகமது ஷமி அதிர்ச்சி

இந்நிலையில் என்னுடைய மனைவி முதல் திருமணம் மற்றும் என்னிடம் மறைத்துவிட்டார் என முகமது ஷமி கூறிஉள்ளார். 

முகமது ஷமி பேசுகையில், ஹசின் ஜஹன் ஏற்கனவே திருமணம் நடந்தது, குழந்தைகள் இருப்பதை என்னிடம் தெரிவிக்கவில்லை. ஹசின் ஜஹனுக்கு முதல் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளை அவரின் உறவினர்கள் என்றே அடையாளம் காட்டினார் என கூறிஉள்ளார். முகமது ஷமி மற்றும் ஹசின் ஜஹனுக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. “எனக்கும், ஹசின் ஜஹனுக்கும் நடந்தது இரண்டாவது திருமணம் என்பது எனக்கு தெரியாது. எங்களுக்கு திருமணம் நடைபெற்ற பின்னர் இரண்டு குழந்தைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது. 

இரு பெண்கள் குழந்தைகளும் என்னுடைய தங்கையின் குழந்தைகள் என்றே ஹசின் ஜஹன் கூறினார், அவருடையது கிடையாது என்று தெரிவித்து இருந்தார்,” என்று முகமது ஷமி கூறிஉள்ளார். 

Next Story