ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம் ஜெட்லியின் பேச்சு பொறுப்பற்றது சந்திரபாபு நாயுடு காட்டம்


ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம் ஜெட்லியின் பேச்சு பொறுப்பற்றது சந்திரபாபு நாயுடு காட்டம்
x
தினத்தந்தி 16 March 2018 10:47 AM GMT (Updated: 16 March 2018 10:47 AM GMT)

பா.ஜனதா கூட்டணியில் இருந்து தனிப்பட்ட காரணத்திற்காக வெளியேறவில்லை என சந்திரபாபு நாயுடு விளக்கம் அளித்து உள்ளார். #TDP #BJP #ChandrababuNaidu


ஐதராபாத்,


தெலுங்குதேசம் மற்றும் பாரதீய ஜனதா இடையில் சில மாதங்களாக நீடித்த பிரச்சனையானது பிரிவில் முடிந்தது. மத்தியில் உள்ள பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது. ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்குதேசம் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவிற்கு 5 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என அப்போதைய காங்கிரஸ் அரசு அறிவித்தது. ஆந்திராவில் தெலுங்குதேசம் உடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா தேர்தல்களில் போட்டியிட்டது. மத்திய அமைச்சரவையில் தெலுங்குதேசம் இடம்பெற்றாலும் மாநிலத்திற்கு பலனளிக்கும் வகையில் எந்தஒரு நகர்வும் இல்லை என குற்றம் சாட்டப்பட்டது. 

4-வது ஆண்டை எட்டிஉள்ள மோடி அரசு சமீபத்தில் தாக்கல் செய்ய மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிக்கப்பட்டது அம்மாநில அரசியல் கட்சிகள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தொடர்ந்து நீடித்த மோதல் போக்கு இப்போது முடிவை சந்தித்து உள்ளது. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது. தென் இந்தியாவில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சியை இழந்து உள்ளது.

ஆந்திரா சட்டசபையில் சந்திரபாபு நாயுடு பேசுகையில் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில், மாநிலத்தின் நலனை பாதுகாக்கும் விதமாகவே நாங்கள் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினோம். நாங்கள் கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம். என்னுடைய தனிப்பட்ட காரணத்திற்காக வெளியேறவில்லை. மாநில நலனுக்காகதான் வெளியேறினேன். 4 வருடங்களாக மாநிலத்திற்காக என்னால் முடிந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். 29 முறை டெல்லி சென்றேன். பலமுறை கோரிக்கை விடுத்தேன். இது மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆனால் ஆந்திர பிரதேசம் தொடர்பாக அதில் எதுவும் இடம்பெறவில்லை. நாங்கள் எங்களுடைய அமைச்சர்களை ராஜினாமா செய்ய செய்து உள்ளோம். 

ஆந்திர பிரதேச மாநிலம் பிரிக்கப்பட்ட போது வழங்கப்பட்ட வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை. சட்டத்தில் சிறப்பு அந்தஸ்து இடம்பெற்று உள்ளது. ஆனால் வழங்கப்படவில்லை. மக்களின் உணர்வுக்காக நிதி வழங்க முடியாது என அருண் ஜெட்லி கூறிஉள்ளார். அவருடைய பொறுப்பற்ற அறிக்கையாகும். மக்களின் உணர்வு காரணமாகவே தெலுங்கானா உருவானது. மக்களின் உணர்வுகள் மிகவும் மதிப்புமிக்கது. நீங்கள் இப்போதும் அநீதியைதான் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள். தெலுங்குதேசம் கட்சி. பல நெருக்கடிகளை தகர்த்துள்ளது, மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதிஉள்ளேன். மாநிலத்திற்கு எதுவும் செய்யவில்லை என சமீபத்திலும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிஉள்ளேன்,” என கூறிஉள்ளார் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.

சந்திரபாபு நாயுடு, அருண் ஜெட்லியின் பேச்சை பதிவு செய்து தன்னுடையை எதிர் கருத்தை பதிவு செய்து வருகிறார். 


Next Story