மாநிலம் முழுவதும் 25-ம் தேதி ராம நவமி கொண்டாடப்படும்: திரிணாமூல் காங்கிரஸ் அறிவிப்பு


மாநிலம் முழுவதும் 25-ம் தேதி ராம நவமி கொண்டாடப்படும்: திரிணாமூல் காங்கிரஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 March 2018 8:32 AM GMT (Updated: 21 March 2018 8:32 AM GMT)

மாநிலம் முழுவதும் 25-ம் தேதி ராம நவமி கொண்டாடப்படும் என்று திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. #RamNavmi #TMC

கொல்கத்தா,

இந்தியாவில் ராம ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது.

இந்தநிலையில் இந்துத்துவா அமைப்புகளுக்கு பதிலடி தரும் வகையில் அவர்கள் பாணியிலேயே திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி  ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதில்,

ராம நவமி நாளில் (25-ம்தேதி) திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் ராமநவமி கொண்டாடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 25-ம் தேதி  மாநிலம் முழுவதும் ரதயாத்திரை நடத்தப்படும் என கூறப்பட்டது.  அதற்கு பின் 25-ம் தேதி ராம நவமி கொண்டாடப்படும் என்றும் ரத யாத்திரை நடத்த மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளது.

Next Story