ஆதாரால் 100 சதவிதம் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை உறுதி செய்ய முடியாது சுப்ரீம் கோர்ட்டில் ஆணையம் தகவல்!


ஆதாரால் 100 சதவிதம் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை உறுதி செய்ய முடியாது சுப்ரீம் கோர்ட்டில் ஆணையம் தகவல்!
x
தினத்தந்தி 22 March 2018 12:34 PM GMT (Updated: 22 March 2018 12:34 PM GMT)

ஆதார் அடிப்படையிலான சோதனையாலும் எப்போதும் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை உறுதி செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #UIDAI #SupremeCourt #Aadhaar

புதுடெல்லி,

ஆதார் இணைப்பு, தகவல்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்று ஆதார் தரவுகளுடன் பயனாளர்களின் பயோமெட்ரிக்ஸ் (கண் கருவிழி படலம், கைரேகை) பொருந்தாமல் செல்கிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இவ்விவகாரத்தில் இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) சிஇஓ அஜய் பூஷண் பாண்டே, ஆதார் அடிப்படையிலான சோதனையால் எப்போதும் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை உறுதிசெய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளார். இந்திய குடிமக்களின் பயோமெட்ரிக்ஸ், அவர்களுடைய ஆதார் அடையாளத்துடன் பொருந்தவில்லை என்ற விவகாரங்களில் அதனை சரிசெய்யும் வகையிலான தொழில்நுட்ப அமைப்பும் இப்போது கிடையாது என்பதையும் குறிப்பிட்டு உள்ளார். 

ஆதார் அடையாளங்களுடன், பயோமெட்ரிக்ஸ் பொருந்தாத நிலையில் குடிமக்களுக்கு சேவைகள் புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளில் அவருடைய பதில் வழங்கப்பட்டு உள்ளது.

குடிமக்களின் பயோமெட்ரிக்ஸ், ஆதார் அடையாளத்துடன் பொருந்தாத நிலையில் அவர்களுக்கான சேவைகளை மறுக்க கூடாது என இந்திய பிரத்யேக அடையாள ஆணையம் மத்திய அமைச்சகங்களிடம் தொடர்ச்சியாக கூறிவருகிறது எனவும் பாண்டே சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளார். இவ்விவகாரத்தில் பிரச்சனைகளை சரிசெய்யும் வகையில் தொழில்நுட்ப அமைப்பையும் அமைக்க அரசிடம் வலியுறுத்தப்படுகிறது. 
இன்டர்நெட் இணைப்புகள், உபகரணங்கள் சரியாக இயங்காமை போன்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பயோமெட்ரிக்ஸ், ஆதார் தரவு உடனான சோதனையில் பொருந்தாமல் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் பல்வேறு விவகாரங்களை பட்டியலிட்டார் பாண்டே. 

 “ஆதார் தரவுடன் குடிமக்களின் பயோமெட்ரிக்ஸ் பொருந்தவில்லை என்ற காரணத்திற்காக அவர்களுக்கு சேவைகள் புறக்கணிக்கப்பட கூடாது என்று இந்திய பிரத்யேக அடையாள ஆணையம் தொடர்ச்சியாக தன்னுடைய சுற்றரிக்கையை விடுத்து வருகிறது. ஆதாரால் 100 சதவிதம் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை உறுதி செய்ய முடியாது என்பதையும் மத்திய அமைச்சகங்களிடம் தெரிவித்து வருகிறோம்,” என பாண்டே சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளார். உதாரணமாக, வங்கிகள் புதிய வங்கி கணக்குகளை தொடங்க வாடிக்கையாளர்களிடம் கைரேகை தகவலை பெறுகிறது, இவை ஆணைய தரவுடன் பொருந்த வேண்டும். இதுபோன்று பிற சேவைகளில் வயதானவர்கள் பிரச்சனைகளை எதிர்க்கொள்வதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. 


Next Story