காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் அன்னா ஹசாரே கடைசி மூச்சு வரை போராடுவேன் என அறிவிப்பு


காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் அன்னா ஹசாரே  கடைசி மூச்சு வரை போராடுவேன் என அறிவிப்பு
x
தினத்தந்தி 23 March 2018 9:14 AM GMT (Updated: 23 March 2018 9:14 AM GMT)

டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே தொடங்கினார்.

புதுடெல்லி,

மத்திய அரசு வலுவான  லோக்பால் மற்றும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா, விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை விலை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி,  சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே   இன்று முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிர போராட்டத்தை மீண்டும் தொடங்கினார்.  

முன்னதாக டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மக்களை ஆளும் திறன் கொண்டவர்களாக அரசியல்வாதிகள் இல்லை. அனைத்து அரசியல்வாதிகளும் ஏமாற்றுபேர்வழிகள் தான். நான் எனது கடைசி மூச்சு வரை போராடுவேன் இவ்வாறு அவர் கூறினார்.

இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் சாராத விவசாய அமைப்புகள், தங்களின் ஆதரவை வழங்கியுள்ளன. 

Next Story