தேசிய செய்திகள்

பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவிற்கு எதிராக விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிக்கு 2000 மிரட்டல் கடிதம் + "||" + Top cop who led probe in Asaram rape case received 2,000 threat letters, phone calls

பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவிற்கு எதிராக விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிக்கு 2000 மிரட்டல் கடிதம்

பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவிற்கு எதிராக விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிக்கு 2000 மிரட்டல் கடிதம்
பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவிற்கு எதிராக விசாரணையை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிக்கு 2000 மிரட்டல் கடிதம் வந்து உள்ளது. #Asaram


ஜோத்பூர்,

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவை குற்றவாளியென ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியாருக்கு ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 

இவ்வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவிற்கு எதிரான விசாரணையை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிக்கு 2000 மிரட்டல் கடிதம் எழுதப்பட்டு உள்ளது, நூற்றுக்கணக்கான தொலைபேசி மிரட்டலும் விடுக்கப்பட்டு உள்ளது. ஜோத்பூர் மேற்கு டிசிபி அஜய் பால் லம்பா, சாமியாருக்கு எதிரான வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தார். அவருக்கு மிரட்டல்கள் அதிகரித்த நிலையில், சில காலம் அவருடைய குழந்தையை பள்ளிக்கு அனுப்பவில்லை, அவருடைய மனைவி வீட்டை விட்டு வெளியே வருவதையே தவிர்த்துவிட்டார். 

லம்பா பேசுகையில், “மிரட்டல் கடிதங்களில் மிகவும் ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்று இருக்கும், ஆசாராமிற்கு ஏதாவது நேரிட்டது என்றால் உங்களையும், உங்களுடையை குடும்பத்தையும் கொன்றுவிடுவோம் என்றெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கும். என்னுடைய விசாரணை காலம் முழுவதும் எனக்கு தொலை பேசி அழைப்புக்கள் வருவது நிற்கவில்லை, நான் உதய்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் தான் எனக்கு மிரட்டல் கடிதங்கள் வருவது நின்றது,” என குறிப்பிட்டு உள்ளார். 

ஜோத்பூர் மாவட்ட எஸ்.பி.யாக (லஞ்ச ஒழிப்பு பிரிவு) இருக்கும் லம்பா மிரட்டல் காரணமாக சில காலமாக தன்னுடைய மகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாமியர் ஆசாராமிற்கு எதிரான வழக்கில் சாட்சி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரை விசாரித்ததில், அப்போது எஸ்பியாக இருந்த சந்தால் மிஸ்ராவை கொலை செய்ய திட்டமிட்டோம் என வாக்குமூலம் கொடுத்து இருந்தார் என்பதையும் லம்பா குறிப்பிட்டு உள்ளார்.