விவசாயிகளையும் இளைஞர்களையும் பிரதமர் மோடி ஏமாற்றி விட்டார் சோனியா காந்தி


விவசாயிகளையும் இளைஞர்களையும் பிரதமர் மோடி ஏமாற்றி விட்டார் சோனியா காந்தி
x
தினத்தந்தி 29 April 2018 8:38 AM GMT (Updated: 2018-04-29T14:08:47+05:30)

விவசாயிகளையும் இளைஞர்களையும் பிரதமர் மோடி ஏமாற்றி விட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். #SoniaGandhi

புதுடெல்லி,

டெல்லியில் ஜன் ஆக்ரோஷ் என்ற பெயரில் மெகா கூட்டம் நடந்தது. இதில் மூத்த தலைவர் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

நாட்டின் இளைஞர்களையும், விவசாயிகளையும் பிரதமர் மோடி ஏமாற்றி விட்டார். மோடி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. நாடு முழுவதிலும் வெறுப்பை விதைத்து வன்முறையை பாஜக கட்டவிழ்த்துள்ளது. மோடி அரசில் ஆணி வேர் வரை ஊழல் பெருகி விட்டது.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களை மோடி அரசு காப்பாற்றுகிறது. சுதந்திரமான அமைப்புகளை மத்திய பாஜக சிதைக்கிறது. இந்திய பொருளாதாரத்தையே மோடி அரசு சீர்குலைத்துவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story