அம்பேத்கரை பிராமணர் என அழைப்பதில் தவறில்லை: குஜராத் சபாநாயகர் பேச்சால் சர்ச்சை


அம்பேத்கரை பிராமணர் என அழைப்பதில் தவறில்லை: குஜராத் சபாநாயகர் பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 30 April 2018 7:42 AM GMT (Updated: 2018-04-30T13:12:51+05:30)

அம்பேத்கர், பிரதமர் மோடி போன்றோரை பிராமணர் என அழைப்பதில் தவறில்லை என்று குஜராத் சபாநாயகர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BRAmbedkar #PmModi

அகமதாபாத்,

அம்பேத்கர், பிரதமர் மோடி போன்றோரை பிராமணர் என்று அழைப்பதில் தவறில்லை என குஜராத் சட்டப்பேரவை சபாநாயகர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற பிராமணர் தொடர்பான நிகழ்ச்சியில்  சட்டப்பேரவை சபாநாயகர் ஆர்.திரிவேதி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, அவர் கூறியதாவது:- நன்கு கற்றறிந்தவர்களை பிராமணர் என அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை. அந்த வகையில் பி.ஆர். அம்பேத்கரை பிராமணர் என்று அழைப்பதில் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த கூற்றுப்படி பிரதமர் மோடியையும் பிராமணர் என்று அழைக்கலாம்”  இவ்வாறு அவர் பேசினார். 

Next Story