வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் கர்நாடகாவில் ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு


வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் கர்நாடகாவில் ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 11 May 2018 1:27 PM GMT (Updated: 11 May 2018 1:27 PM GMT)

9746 வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. #RajarajeshwariNagar


பெங்களூரு, 

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் (ராஜராஜேஸ்வரி நகர்) தொகுதியில் 9746 வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்பட்டது. வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் வெடிதத்து. ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சாட்டினர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய தேர்தல் கமி‌ஷனில் காங்கிரஸ் கட்சி புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அத்தொகுதியில் மே மாதம் 28-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், 31 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 


Next Story