வருமான வரியை ஒழித்துக் கட்டவேண்டும்: சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்


வருமான வரியை ஒழித்துக் கட்டவேண்டும்: சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 May 2018 10:00 PM GMT (Updated: 11 May 2018 8:48 PM GMT)

வருமான வரியை ஒழித்துக் கட்டவேண்டும் என பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஐதராபாத்,

ஐதராபாத் நகரில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பத்தினருக்கும், சுயதொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கும் வருமான வரி பெரும் தொல்லை தருவதாக உள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் சதவீதம் மிக மிகக் குறைவாகும். இந்த சிறிய சதவீதத்துக்காக மக்கள் மீது வருமான வரி என்னும் சுமையை ஏன் சுமத்த வேண்டும்?... எனவே வருமான வரியை ஒழித்துக் கட்ட வேண்டும்.

இப்படி செய்தால் அதிக அளவில் சேமிப்புகள் உருவாகும். இதனால் முதலீடுகள் பெருகி நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். வருமானவரியை ஒழிப்பதன் மூலம் இழக்கும் தொகையைவிட மறைமுக வரி மூலம் அரசுக்கு அதிக தொகை கிடைக்கும். மேலும் இயற்கை வளங்கள் மற்றும் அலைக்கற்றை ஆகியவற்றை ஏலம் விடுதல் முறைக்கு கொண்டு வருவதன் மூலம் நிதி ஆதாரமும் நிறைய கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story