பிரதமர் மோடி வரும் 21ம் தேதி ரஷ்யா பயணம்


பிரதமர் மோடி வரும் 21ம் தேதி ரஷ்யா பயணம்
x
தினத்தந்தி 14 May 2018 1:08 PM GMT (Updated: 14 May 2018 1:08 PM GMT)

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வரும் 21ம் தேதி ரஷ்யா செல்லவிருக்கிறார். #ModiVisitRussia

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி வரும் 21ம் தேதி ரஷ்யா செல்ல இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமரின் பயணம் குறித்து  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ரஷ்ய நாட்டிற்கு மே 21ம் தேதி செல்லும் பிரதமர் மோடி, சோச்சி நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். மேலும் இந்த நிகழ்வில் இரு நாட்டு தலைவர்களும் சர்வதேச விவகாரங்கள் மற்றும் உறவுகளை பலப்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள்” என்றும் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதனிடையே கடந்த மாதம் சீனாவிலுள்ள வுஹான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story