தேசிய செய்திகள்

கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மோடி அரசுக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - ப.சிதம்பரம் + "||" + State CMs and FMs to join hands to protest the Centre s attempt to violate the Constitution P Chidambaram

கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மோடி அரசுக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - ப.சிதம்பரம்

கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மோடி அரசுக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - ப.சிதம்பரம்
கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மோடி அரசுக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ப.சிதம்பரம் கூறிஉள்ளார். #PChidambaram

புதுடெல்லி,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட 15-வது நிதிக் குழு, வரிவருவாயை பங்கீடுவதில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது முக்கிய இடம் வகிக்கும் என தெரிவித்து உள்ளது. இருப்பினும் தென் மாநிலங்கள் தரப்பில் 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி வருவாய் பங்கீடு இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஏனென்றால், வட இந்தியாவுடன் ஒப்பீடுகையில் தென் இந்தியா மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது என்ற பணியில் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியை கண்டு உள்ளது. இப்போது மக்கள் தொகை அடிப்படையிலான வருவாய் பங்கீடு பெரும் ஏமாற்றம் அளிக்கும் விதமாகவே இருக்கும் என பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியும், கேரளாவுக்கு ரூ.20 ஆயிரம் கோடியும் இழப்பு ஏற்படும். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்படுத்தும் கொள்கையை சீரிய முறையில் செயல்படுத்தியதற்காக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு தண்டனை அளிக்கும் விதமாக இந்தப் பரிந்துரை அமைந்துள்ளது என பார்க்கப்படுகிறது. 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைக்கு எதிராகவும், அதை திருத்தி அமைக்கவும் தென் மாநிலங்களை சேர்ந்த நிதி அமைச்சர்கள் மாநாடு கேரளாவில் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் கலந்துக்கொள்ளவில்லை.
 
 கேரள நிதி அமைச்சர் டிஎம் தாமஸ் ஐசக் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனக் கூறி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய கருத்தை பதிவு செய்து உள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், 15 வது நிதி ஆணையத்திற்கு வரையப்பட்ட விதிமுறைகள் குறித்து கேரள நிதியமைச்சரின் கடிதத்தை வரவேற்கிறேன். அரசியல் சாசனத்திற்க்கும், கூட்டாட்சி தத்துவத்திற்க்கும் எதிராக செயல்படும் மத்திய அரசை அனைத்து மாநில முதலமைச்சர்களும், நிதியமைச்சர்களும் எதிர்க்க வேண்டும். என கூறிஉள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. மல்லையா, நிரவ் மோடியுடன் நட்பு; எங்களுக்கு எதிராக ஐடி ரெய்டா? மத்திய அரசு மீது அரவிந்த் கெஜ்ரிவால் பாய்ச்சல்
டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெல்லாட்டிற்கு சொந்தமான 15 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.