தேசிய செய்திகள்

ஆன்லைனில் ஐ.பி.எல். போட்டி சூதாட்டம்; நவிமும்பையில் 6 பேர் கைது + "||" + Six persons arrested from Navi Mumbai for betting on IPL game

ஆன்லைனில் ஐ.பி.எல். போட்டி சூதாட்டம்; நவிமும்பையில் 6 பேர் கைது

ஆன்லைனில் ஐ.பி.எல். போட்டி சூதாட்டம்; நவிமும்பையில் 6 பேர் கைது
ஆன்லைன் வழியே ஐ.பி.எல். போட்டி ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை நவிமும்பை போலீசார் கைது செய்துள்ளனர். #IPLGame

மும்பை,

டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த சனிக்கிழமை ஐ.பி.எல். போட்டி ஒன்று நடந்தது.  இந்த நிலையில், நவிமும்பை பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சூதாட்டம் நடைபெறுகிறது என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து நவிமும்பை குற்ற பிரிவு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.  இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் புனேயை சேர்ந்த ராகேஷ், அபிஜித், கிருஷ்ணா மற்றும் நவிமும்பையை சேர்ந்த கணேஷ் மற்றும் கிஷோர் மற்றும் மும்பையை சேர்ந்த தர்மேஷ் காலா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

அவர்களிடம் இருந்து 3 மடிக்கணினிகள், 27 மொபைல் போன்கள், 27 சிம் கார்டுகள், வாய்ஸ் ரெகார்டர், 2 வாகனங்கள் மற்றும் ரூ.39.29 லட்சம் மதிப்பிலான பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆன்லைன் வழியே அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.  இதுபற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களை வருகிற 17ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.