தேசிய செய்திகள்

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஆந்திரா, பஞ்சாப் மாநில ரிசார்ட்டுகளில் தங்க வைக்க திட்டம் என தகவல் + "||" + Cong may shift its MLAs to Punjab or Andhra to fend off possible poaching attempts By BJP

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஆந்திரா, பஞ்சாப் மாநில ரிசார்ட்டுகளில் தங்க வைக்க திட்டம் என தகவல்

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஆந்திரா, பஞ்சாப் மாநில ரிசார்ட்டுகளில் தங்க வைக்க திட்டம் என தகவல்
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஆந்திரா, பஞ்சாப் மாநில ரிசார்ட்டுகளில் தங்க வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. #KarnatakaElections2018 #Congress #BJP


பெங்களூரு,

 சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், ஆளும் காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றியை தனதாக்குகிறது. ஆட்சி அமைக்க தேவையான 112 தொகுதிகளை எந்த கட்சியும் எட்டவில்லை. இதற்கிடையே காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து பா.ஜனதாவும், காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்து உள்ளது. ஆளுநரிடம் பா.ஜனதா ஒருவார காலம் அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஆந்திரா, பஞ்சாப் மாநில ரிசார்ட்டுகளில் தங்க வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ.க்களை வாங்கும் முயற்சியை தடுக்கும் வகையில் இந்நகர்வை மேற்கொள்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விராட் கோலி அணியின் வெற்றி போன்றது, கர்நாடக தேர்தல் வெற்றி - ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து
கர்நாடக தேர்தலில் கிடைத்த வெற்றி, விராட் கோலி அணியின் வெற்றி போன்றது என்றும், கூட்டணிக்கு கிடைத்த பலன் என்றும் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.