ஒடிசா கடற்கரையில் பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி; ராணுவ மந்திரி வாழ்த்து


ஒடிசா கடற்கரையில் பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி; ராணுவ மந்திரி வாழ்த்து
x
தினத்தந்தி 21 May 2018 8:29 AM GMT (Updated: 21 May 2018 8:40 AM GMT)

ஒடிசாவின் பாலசோர் நகரில் சண்டிபூரில் உள்ள கடற்கரையில் பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமுடன் பரிசோதனை செய்யப்பட்டது.

பாலசோர்,

ஒடிசாவின் பாலசோர் நகரில் சண்டிபூரில் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமுடன் பரிசோதனை செய்யப்பட்டது.

உலகிலேயே மிக வேகமுடன் செல்லும் சூப்பர்சோனிக் ரக ஏவுகணையான பிரமோசின் வாழ்நாள் 10 வருடங்களில் இருந்து 15 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதனால் ஏவுகணைகள் தயாரிப்புக்கு ஆகும் பெருமளவிலான தொகை சேமிக்கப்பட்டு உள்ளது.

ஏவுகணையின் வாழ்நாள் நீட்டிப்பிற்கு பின் இந்தியாவில் நடத்தப்படும் முதல் பரிசோதனை வெற்றிகரமுடன் முடிந்த நிலையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பிரமோஸ் குழு மற்றும் டி.ஆர்.டி.ஓ. ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.


Next Story