தேசிய செய்திகள்

வீராட் கோலியை அடுத்து பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி புதிய சவால் + "||" + Yes to Kohli? Accept one from me too Rahul Gandhi tags PM Modi for fuel challenge

வீராட் கோலியை அடுத்து பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி புதிய சவால்

வீராட் கோலியை அடுத்து பிரதமர் மோடிக்கு  ராகுல்காந்தி புதிய சவால்
கிரிக்கெட் வீரர் கோலி விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய சவால் விடுத்துள்ளார். #PMModi #RahulGandhi
புதுடெல்லி:

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார். 
 
இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார்.

அந்த டுவிட்டர் பதிவில், ‘நான் ரத்தோர் விடுத்த சவாலை ஏற்று கொண்டுள்ளேன். இப்போது என் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோருக்கு இந்த ஃபிட்னஸ் சவாலை விடுக்கின்றேன்’, என கூறியிருந்தார். 

இதனிடையே, கோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் எனவும் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய சவால் ஒன்றை விடுத்துள்ளார். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அன்புள்ள பிரதமர், நீங்கள் விராட் கோலியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றதற்கு மகிழ்ச்சி. இப்போது என்னிடம் ஒரு சவால் உள்ளது: எரிபொருள் விலையை குறையுங்கள் அல்லது காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தை செய்வதோடு, உங்களை அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தும். உங்கள் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்., என ராகுல் காந்தி கூறியுள்ளார்.