கொல்கத்தாவில் பணியாற்றிய கேரள பாதுகாப்பு படை வீரர் பலி: நிபா வைரஸ் பாதிப்பு என சந்தேகம்


கொல்கத்தாவில் பணியாற்றிய கேரள பாதுகாப்பு படை வீரர் பலி: நிபா வைரஸ் பாதிப்பு என சந்தேகம்
x
தினத்தந்தி 30 May 2018 10:06 AM GMT (Updated: 30 May 2018 10:06 AM GMT)

கொல்கத்தாவில் பணியாற்றிய கேரள பாதுகாப்பு படை வீரர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்து இருக்க கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. #NipahVirus

கொல்கத்தா,

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் காய்ச்சல் வேகமாக பரவியது. இந்த காய்ச்சல் தொற்றுநோய் ஏற்பட்ட வவ்வால்கள் மூலம் பிற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டது. நிபா வைரஸ் தாக்கி தற்போது வரை கேரளாவில்  13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், கேரளாவைச்சேர்ந்த பாதுகாப்பு படை வீரரான சீனு பிரசாத் காய்ச்சல் காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். எனவே, அவர் நிபா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 

அவரது இரத்த மாதிரிகள், புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள போர்ட் வில்லியம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சீனு பிரசாத், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் கூறுகின்றன.

Next Story