கவுன்சிலர்கள் யாரும் இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு


கவுன்சிலர்கள் யாரும் இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 8 Jun 2018 2:04 PM GMT (Updated: 8 Jun 2018 2:04 PM GMT)

இஸ்லாமியர்கள் நமக்கு வாக்களிக்கவில்லை என்பதால் அவர்களுக்காக எந்த வேலையும் செய்யாதீர்கள் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GowdaPatil #BJP

பெங்களூர்,

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து புதிதாக 25 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். 

இந்தநிலையில்  பிஜாப்பூர் பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஓன்றில் பங்கேற்று பேசிய அந்த தொகுதியின் எம்.எல்.ஏ பசவராஜ் கவுடா பாட்டீல் பேசியதாவது:

பாஜக கவுன்சிலர்கள் யாரும் இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இஸ்லாமியர்கள் யாரும் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை.

எனவே இந்துக்களுக்கு மட்டுமே உதவ வேண்டும். மேலும் தனது அலுவலகத்திற்கு தொப்பி மற்றும் புர்காவுடன் யாரும் வரக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார். 

கர்நாடக பாஜக எம்.எல்.ஏவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story