கேரள முதல் மந்திரி கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தக சபை தலைவர் மயங்கி விழுந்து மரணம்


கேரள முதல் மந்திரி கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தக சபை தலைவர் மயங்கி விழுந்து மரணம்
x
தினத்தந்தி 9 Jun 2018 11:36 AM GMT (Updated: 9 Jun 2018 11:36 AM GMT)

கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் உடனான கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மூத்த வர்த்தக சபை தலைவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்து உள்ளார்.

கொல்லம்,

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராக இருந்தவர் காசிம் (வயது 69).  இவர் சி.ஐ.டி.யூ.வுடன் இணைந்த கேரள முந்திரி தொழிலாளர்கள் மையத்தின் பொது செயலாளராகவும் இருந்து வந்துள்ளார்.  கேரள முந்திரி வளர்ச்சி கழக தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், முந்திரி தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றி விவாதம் மேற்கொள்வதற்காக முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது.  இதில் முந்திரி தொழிலாளர்களின் சார்பில் வர்த்தக சபை தலைவர்கள் கலந்து கொண்டனர்.  மூத்த வர்த்தக சபை தலைவராகவும் உள்ள காசிம் அவர்களில் ஒருவராக கலந்து கொண்டார். 

இந்நிலையில் திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார்.  அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  ஆனால் அங்கு அவர் உயிரிழந்து விட்டார்.


Next Story