இந்தியாவில் நதிகளை இணைப்பது குறித்து முதலில் கூறியது எங்கள் அரசாங்கம் தான்: ஆந்திர முதல்வர்


இந்தியாவில் நதிகளை இணைப்பது குறித்து முதலில் கூறியது எங்கள் அரசாங்கம் தான்: ஆந்திர முதல்வர்
x
தினத்தந்தி 11 Jun 2018 11:11 AM GMT (Updated: 11 Jun 2018 11:11 AM GMT)

இந்தியாவில் நதிகளை இணைப்பது குறித்து முதலில் கூறியது எங்கள் அரசாங்கம் தான் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #PolavaramProjectWall

மேற்கு கோதாவரி,

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பொலாவரம் நீர்ப்பாசனத்திட்டத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் 13 மாவட்டங்களில் இருக்கும் சுமார் 7.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் இந்நீர்பாசனத்திட்டத்தின் கட்டுமான பணிகள் 55 சதவீதம் முடிவுற்ற நிலையில் தடுப்பணை சுவர் கட்டும் பணியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் இத்திட்டம் குறித்து அவர் பேசுகையில், "இது இந்தியாவிலேயே கட்டப்படும் மிகப்பெரிய தடுப்பணை சுவராகும். ஆந்திர மாநிலத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்திட்டத்தினை இந்திய நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன். எதிர்க்கட்சியான் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி இத்திட்டத்தினை எதிர்த்து பல தடைகளை உருவாக்கி வருகிறது. இருப்பினும் பொலாவரம் திட்டத்தினை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வெற்றிகரமாக முடித்து காட்டுவேன். இத்திட்டத்திற்காக மத்திய அரசாங்கம் இன்னும் 1000 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது குறித்து முதலில் கூறியது எங்கள் அரசாங்கம் தான்” எனக் கூறினார்.

சுமார் 150 அடியில் உருவாகும் இந்த தடுப்பணை சுவரானது 194 டிஎம்சிஃப்டி தண்ணீரை சேமித்து வைக்கும் திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story