தேசிய செய்திகள்

ஜம்மு: பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ்காரர்கள் பலி + "||" + J-K: Two cops killed in gunfight with militants

ஜம்மு: பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ்காரர்கள் பலி

ஜம்மு: பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ்காரர்கள் பலி
ஜம்முவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். #JKTwoCopsKilled
ஸ்ரீ நகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த போலீஸ்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக போலீசாரும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பயங்கரவாதிகளால் இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தில் பெரும் பதற்றம் நிலவுவதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்கொண்டு எந்த தகவல்களும் வெளிவரவில்லை.