தேசிய செய்திகள்

பிஎன்பி மோசடியில் நிரவ் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிப்பு + "||" + Special PMLA court in Mumbai issues a non bailable warrant against Nirav Modi

பிஎன்பி மோசடியில் நிரவ் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிப்பு

பிஎன்பி மோசடியில் நிரவ் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. #NiravModi #PNBFraud
மும்பை,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர். 

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை இந்திய விசாரணை முகமைகள் நாடி உள்ளது. வங்கி மோசடி தொடர்பாக விசாரிக்கும் விசாரணை முகமைகள் அவருடைய சொத்துக்களையும் முடக்கி வருகிறது. மோசடி வழக்கில் நிரவ் மோடிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை  மும்பையில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.