குஜராத் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தளம், ஜேஎப்-17 போர் விமானங்கள் நிலை நிறுத்தம்


குஜராத் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தளம், ஜேஎப்-17 போர் விமானங்கள் நிலை நிறுத்தம்
x

குஜராத் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தளத்தை கட்டமைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.



இந்தியாவின் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் ஐதராபாத் மாவட்டத்தில் இந்திய எல்லையை அணுகும் வகையிலான  போலாரி பகுதியில் ராணுவ விமானப்படை தளத்தை அமைத்துள்ளது. 

போர் விமானங்கள் தீவிரமாக பறக்கும் நடவடிக்கைகள் அங்கு காணப்படுவதாக கூறப்படுகிறது. கிழக்கு எல்லையில் இந்தியாவின் திறனை எதிர்க்கொள்ளும் வகையில் சீனாவின் ஜேஎப் 17 போர் விமானங்களை நிலை நிறுத்தியுள்ளது எனவும் தெரிகிறது. கடல்வழியாக இந்தியாவிற்குள் வந்து பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் இடமாக அறியப்படும் பகுதியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பகுதியில் விரிவான திட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் குஜராத் மாநிலம் தீசாவில் போர் விமானப்படை தளத்தை கட்டமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

Next Story