தேசிய செய்திகள்

மறுபிறவி எடுத்த நாளை பூஜை செய்து கொண்டாடிய உத்தரப்பிரதேச அமைச்சர் + "||" + UP Min performs pooja to mark his 'rebirth'

மறுபிறவி எடுத்த நாளை பூஜை செய்து கொண்டாடிய உத்தரப்பிரதேச அமைச்சர்

மறுபிறவி எடுத்த நாளை பூஜை செய்து கொண்டாடிய உத்தரப்பிரதேச அமைச்சர்
தான் உயிர் பிழைத்த நாளை ‘மறுபிறவி’ எடுத்த நாளாக கொண்டாடி வருகிறார் பாஜக கட்சியைச் சேர்ந்த உத்தரப்பிரதேச அமைச்சர் நந்த் கோபால் குப்தா. #UPMinisterRebirth
அலகாபாத்,

பொதுவாக எல்லோரும் பிறந்த நாளை தான் கொண்டாடுவோம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் பாஜக கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நந்த் கோபால் குப்தா, தான் ‘மறுபிறவி’ எடுத்த நாளை பூஜை செய்து கொண்டாடி வருகிறார்.

முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு விபத்தில் தான் பாதுகாப்பாக உயிர்பிழைத்த நாளை தான் அமைச்சர் நந்த் கோபால் குப்தா மறுபிறவி எடுத்த நாளாக பூஜை செய்து கொண்டாடி வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் நகரத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிற அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நந்த் கோபால் மறுபிறவி நாள் என நகரமே  கொண்டாட நிகழ்ச்சியின் போது எந்தவொரு அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க பஹதூர்கான்ஜ் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.